மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல்: அச்சுவேலியில் இடம்பெற்ற பயங்கர சம்பவம்!

அச்சுவேலி மத்திய கல்லூரி மாணவர்கள் குழுவொன்றிற்குள் மோதல் இடம்பெற்றுள்ளது, இச்சம்பவத்தில் மாணவர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் காயமடைந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றுள்ளது.

11, 12ஆம் தர மாணவர்கள் குழுக்களிற்கிடையில் இந்த மோதல் நடந்தது. மாணவன் ஒருவரை பட்டப்பெயர் சூட்டி அழைத்ததால் மோதல் ஏற்பட்டுள்ளது.

இதில் காயமடைந்த மாணவன் 12ஆம் தர மாணவன் ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.