யாழில் விடுதலைப்புலிகள் தயாரித்த வெடிபொருட்கள் சிறப்பு அதிரடிப்படையினர் வசம்

பொலிகண்டி புதுவளவு பிரதேசத்தில் வெடிபொருட்கள் சில இன்று மீட்கப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த வெடிபொருட்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் தயாரிப்பிலானவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வெடிபொருட்களை செயலிழக்க வைப்பதற்காக சிறப்பு அதிரடிப்படையின் உயர்மட்டப் பிரிவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் , அவர்களின் வருகைக்காக காத்திருப்பதாகவும் வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Gallery Gallery Gallery