ஆடைகள் கொள்வனவு செய்வதற்காக வருகைதந்து, கடை உரிமையாளரின் கைப்பையை திருடிச் சென்ற இளைஞருக்கு பொலிஸார் வலைவீசியுள்ளனர்.
இந்த சம்பவம் கொட்டகலை நகரிலுள்ள ஆடை விற்பனை நிலையமொன்றில் இடம்பெற்றுள்ளது. விற்பனை நிலையத்திற்கு வருகைதந்த இளைஞர், கடை உரிமையாளரின் பையை திருடிச் செல்லும் போது அங்கு பொருத்தப்பட்டிருந்த சீ.சீ.டி.வி கமராவில் காணொளி பதிவாகியுள்ளது.
இதனை பயன்படுத்தி சந்தேகநபரை கைது செய்யும் முயற்சியில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதேவேளை களவாடப்பட்ட கைப்பையில் 20,000 ரூபாய் பணமும், சில முக்கியமான ஆவணங்களும் காணப்பட்டதாக அதன் உரிமையாளர் திம்புள்ள பத்தனை பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.