கொரோனா தொற்றாளர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகள் கொவிட் நோயாளர்களால் நிரம்பியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன (Channa Jayasumana) தெரிவித்தார்.
கொரோனா தொற்றாளர்களுக்காக இதுவரை பயன்படுத்தப்படாத வைத்தியசாலைகளின் தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகளை பயன்படுத்தி நிலைமையை சீரமைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
மத்திய கொழும்பு அரச வைத்தியசாலையில் கொவிட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் வழங்கலை கண்காணிப்பதற்காக சென்ற சந்தர்ப்பத்தில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது இதனை தெரிவித்தார்.