வெளிநாடுகளுக்கு அனுப்புவதாகக் கூறி பெண்களை நிர்க்கதியாக்கும் வெளிநாட்டு முகவர் நிலையங்கள், இடைத்தரகர்கள் குறித்து மலையகப் பகுதிகளில் பரவலாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவ்வாறு ஏமாற்றப்படும் பெண்களிடம் பெருந்தொகைப் பணத்தையும் கடவுச்சீட்டுகளையும் பெற்றுக்கொண்டு இவர்கள் தலைமறைவாகி விடுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்விடயம் தொடர்பில் பொலிஸ் நிலையம் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து இத்தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை பொது மக்கள் இவ்வாறான சம்பவங்கள் குறித்து கவனமாக இக்க வேணடும் என்றும் கூறப்பட்டுள்ளது.