மயானத்தில் கூட இடம் இல்லை… இதெல்லாம் தேவையா? திருமணத்தை ரத்து செய்த பெண் மருத்துவர்!

இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிகரித்து வருகிறது. இரண்டாம் மிகவும் தீவிரமாக இருந்து வரும் நிலையில் பல மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கேற்ப செவிலியர்கள், டாக்டர்கள் இல்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஒரு சில மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்கள் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்ட போதிலும் அதை கேன்சல் செய்து விடுகிறார்கள்.

இந்த நிலையில் நாக்பூர் நகரைச் சேர்ந்தவர் மருத்துவர் டாக்டர் அபூர்வா மங்கலகிரி.

இவர் நாக்பூரில் உள்ள இதய நோய் துறைக்கான ஆராய்ச்சி மையத்தில் மருத்துவராக உள்ளார். எம்டி படித்துள்ள இவர் பொது நல மருத்துவரும் கூட.

இவருக்கு கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்தனர். எனினும் இந்த திருமணத்தை ரத்து செய்துவிட்டார் அபூர்வா. இதுகுறித்து அவர் கூறுகையில் நான் எம்டி படித்துள்ளதால் தினந்தோறும் எனக்கு பலர் போன் செய்வார்கள்.

எனக்கு தெரிந்த மருத்துவமனைகளில் ஒருவருக்கு படுக்கை வசதி வாங்கித் தருமாறு வேண்டுகோள் விடுப்பார்கள். ஆனால் இந்த சமயத்தில் நான் உதவ முடியாத நிலையில் இருப்பேன்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் எனது தந்தையை கொரோனாவுக்கு இழந்தேன். இந்த தொற்றுக்கு மத்தியில் மருத்துவமனைகளில் படுக்கைகள், ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், மருந்துகள், நர்ஸ்கள், மருத்துவர்கள் உள்ளிட்டவை தட்டுப்பாடாக உள்ளது.

இவ்வளவு ஏன் மயானத்தில் கூட இடம் கிடைக்காமல் சடலங்கள் வரிசை கட்டி கிடக்கின்றன. 20 பேர் எனது திருமணத்தில் கலந்து கொண்டு அடுத்த நாளே அவர்களுக்கு கொரோனா பாசிட்டிவ் என ஆகும்.

இதெல்லாம் தேவையா? எப்போது திருமணம் செய்து கொள்வேன் என்பது தெரியாமது. தற்போது நோயாளிகளுக்கு சேவை செய்வதே எனது லட்சியம்.

திருமண ஏற்பாடுகள் செய்வதற்கு முன்பே இதை கூறியிருக்கலாம். ஆனால் எனது பெற்றோருக்காக திருமணம் செய்ய சம்மதித்தேன்.

தற்போது நாட்டில் நிலைமை மோசமாவதை அடுத்து எனது தாய், சகோதரியிடம் பேசினேன். எனது விருப்பம் என்னவோ அதுவே அவர்களது விருப்பம் என்றார்கள் என்று அபூர்வா தெரிவித்தார்.