படையினரின் தீவிர கண்காணிப்பில் யாழ் நகர்

கடந்த 3 நாட்களாக நாடு தழுவியதாக நடைமுறைப் படுத்தப்பட்டிருந்த சமூக முடக்கல் இன்று அதிகாலை 04.00 மணி முதல் விலக்கிக்கொள்ளப்பட்டது.

இதை அடுத்து தேசிய அடையாள அட்டை இலக்க நடைமுறை யாழ். நகரில் காவல்துறையினரால் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இன்று முதல் எதிர்வரும் மே-31 ஆம் திகதிவரை அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டும் தேசிய அடையாள அட்டை இலக்கத்தின் இறுதி எண்ணை அடிப்படையாக கொண்டு பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் இன்று ஒற்றை இலகத்துடன் முடிவடையும் தேசிய அடையாள அட்டைதாரர்கள் மாத்திரம் நடமாட முடியும். குறித்த நடைமுறையில் பொதுமக்களது நடமாட்டத்தை பரிசோதிக்கும் வகையில் யாழ். நகரப் பகுதியில் காவல்துறையினர் தீவிர சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றதாக கூறப்படுகின்றது.