வடக்கில் மேலும் ஒரு கொரோனா மரணம் பதிவு

வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வவுனியா வடக்கு நெடுந்கேணியை சேர்ந்த நபர் உயிரிழந்துள்ள நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திடீர் சுகயீனம் காரணமாக நேற்று காலை வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்ட குறித்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் முன்னரே உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து இறப்பின் பின் நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.