கொழும்பில் பிரபல தொழிலதிபர் உபாலி ஜயசிங்க, வீதியில் உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது திடீரென மயக்கமுற்று கீழே விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் கொழும்பு வோரட் பிரதேசத்தில் இன்று காலை நடந்தது. இதனையடுத்து அவர் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சேர்க்கப்பட்டிருப்பதோடு அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.
இதேவேளை தொழிலதிபர் உபாலி ஜயசிங்க, பிரபல சிங்கள நடிகையான சபீத்தா பெரேராவின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.