இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் 2021 மே 26ம் தேதி நிகழ இருக்கிறது. புத்த பூர்ணிமா கொண்டாடப்படக்கூடிய அற்புத நாளில் இந்த சந்திர கிரகணம் ஏற்படுகிறது.
இன்று 101.6 சதவீதம் என முழு கிரகணமாக நடக்கும் இந்த நிகழ்வு மதியம் 2.17 மணிக்கு தொடங்கி இரவு 7.19 மணி வரை என 5 மணிநேரம் 2 நிமிடங்கள் வரை நீடிக்கிறது.
குரு பகவான் ஆளக்கூடிய விசாக நட்சத்திரத்தில் இந்த சந்திர கிரகண நிகழ்வு ஏற்படும் என்பதால் குரு ஆளும் ராசி மற்றும் நட்சத்திரங்கள் பரிகாரம் செய்வது நல்லது.
ஒவ்வொரு ராசிக்கும் எப்படிப்பட்ட பலன்கள் நடைபெறும் என்பதைப் பார்ப்போம்.
சந்திர கிரகணம் மே 26 – எளிய பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகள்
மேஷம்
உங்களின் ஆரோக்கியம் பாதிக்க வாய்ப்புள்ளது. மேலும் உங்களுக்கு சில நிதி இழப்பு ஏற்படக்கூடும்.
ரிஷபம்
ரிஷப ராசியினர் வீண் செலவுகளை சந்திக்க வேண்டி இருக்கும். அனுமன் மந்திரத்தை உச்சரிப்பது நல்லது.
மிதுனம்
மிதுனத்தில் இருக்கும் புனர்பூசம் (பாதம் 1,2,3) பாதிக்கப்படும் என்பதால் ஓம் பத்மத்வஜாய வித்மஹே ஹேம ரூபாய தீமஹி தந்நோ சந்திர ப்ரசோதயாத் என்ற சந்திர காயத்ரி மந்திரத்தை உச்சரிக்கவும்.
கடகம்
கடக ராசியில் இருக்கும் புனர்பூசம் (பாதம் 4) நட்சத்திரம் பாதிக்கும் என்பதால் இவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
சிவனை வழிபட்டு மற்றும் அரிசி தானம் செய்வது நல்லது.
சிம்மம்
சிம்ம ராசிக்கு பெரியளவில் பாதிப்பு ஏற்படாது. இருப்பினும் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். ஸ்ரீ ஆதித்யா ஹிருதயம் ஸ்தோத்திரத்தை உச்சரிக்கவும்.
கோதுமை தானம் செய்யுங்கள். கன்னி நிதி ரீதியான சிக்கல்களை சந்திக்க நேரிடும். மகா விஷ்ணு வழிபாடு செய்வது நல்லது.
துலாம்
துலாம் ராசியில் இருக்கும் விசாக நட்சத்திரத்தில் கிரகணம் நிகழ்வதால் கூடுதல் கவனம் தேவை. நீங்கள் நிதி சிக்கல்களை சந்திக்க
நேரிடும். ஸ்ரீ சுக்கிர பகவானுக்குரிய காயத்ரி மந்திரத்தை உச்சரிக்கவும். உணவு தானம் செய்யுங்கள். சுக்ர
காயத்ரி மந்திரம்: ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே தனுர் ஹஸ்தாய தீமஹி தந்நோ சுக்ர: ப்ரசோதயாத்
விருச்சிகம்
விருச்சிக ராசியில் இருக்கும் விசாக நட்சத்திரத்தில் கிரகணம் நிகழ்வதால் கவனம் தேவை. உங்கள் ஆரோக்கியத்தை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள்.
ஸ்ரீ ஆஞ்சனேயர் காயத்ரி மந்திரம் ஓம் ஆஞ்சனேயாய வித்மஹே வாயு புத்ராய தீமஹி தந்நோ ஹனுமத் ப்ரசோதயத் தனுசு உங்களுக்கு சில நிதி நெருக்கடிகள், மன கசப்பு ஏற்படலாம். ஆன்மீக புத்தகங்களை தானம் செய்யுங்கள். குரு காயத்ரி மந்திரம் உச்சரிக்கவும். குரு காயத்ரி மந்திரம் ஓம் விருஷபத்வஜாய வித்மஹே க்ருணி ஹஸ்தாய தீமஹி தந்நோ குருப் ப்ரசோதயாத்
மகரம்
உங்கள் ஆரோக்கியத்தை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள்.
எள் தானம் செய்தும், அனுமனை வழிபாடு செய்வதும் நல்லது.
கும்பம்
கும்ப ராசியினர் சில நிதி சிக்கல்களைச் சந்திக்க நேரிடும். அனுமன் மந்திரங்களை உச்சரிப்பதும், எள் தானம் செய்வது நல்லது. மீனம் மீன ராசியினர் பேச்சு, செயலில் கவனம் தேவை. உடல் நலம் பேணுங்கள். விஷ்ணு சஹஸ்ரணாமம் படியுங்கள்.