அரசாங்கத்திற்கு அதிர்ச்சி கொடுத்த தாதியர் சங்கம்! நாளைமுதல் பணிப்பகிஷ்கரிப்பு

இலங்கை தாதியர் சங்கத்தினர் அனைவரும் சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

அதன்படி, அவர்கள் நாளை திங்கட்கிழமை முதல் ஜுன் முதலாம் திகதி வரை போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில் ஈடுபட்டுள்ள தாதியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு அதிகாரிகள் சரியான தீர்வுகளை வழங்கத் தவறியதால் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.