ஜூன் மாதம் இறுதி வரை பயணக்கட்டுப்பாடு? ஆராய்கிறது அரசாங்கம்

நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடு இன்றைய தினம் தளர்த்தப்பட இருந்த நிலையில் அந்த முடிவில் மாற்றத்தினை கொண்டுவந்து பயணத்தடை தளர்த்தப்பட்வில்லை.

எனினும் தொடர்ந்தும் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்கின்றமையினால் ஜூன் மாதம் இறுதி வரையில் பயணக்கட்டுப்பாடு நீடிப்பது தொடர்பில் அரசாங்கம் ஆராய்கின்றது.