இலங்கையில் தோல்வியடைந்த பயணத்தடை முறை!

உலகில் மிகவும் தோல்வியடைந்த பயணத்தடை முறையே இலங்கையில் அமுல்படுத்தப்படுகின்றது என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் கூட்டமைப்பின் தலைவர் டொக்டர் ருக்ஷான் பெல்லன தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடை முறைமை முற்று முழுதாக தோல்வியடைந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பயணத்தடை அமுல்படுத்தலின் நோக்கம் எந்த வகையிலும் அடையப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். பயணத்தடை விதிக்கப்பட முன்னதாக பதிவான மரணங்கள் நோய்த் தொற்று உறுதியாளர்கள் எண்ணிக்கைகளை விடவும் தற்பொழுது எண்ணிக்கைகள் அதிகரித்துள்ளதன் மூலம் இதனை புரிந்து கொள்ள முடியும் என தெரிவித்துள்ளார்.

மரணங்களின் எண்ணிக்கை பத்து மடங்காக உயர்வடைந்துள்ளதன் மூலம் நிலைமையின் பாரதூரத்தன்மை வெளிப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பயணத்தடையை உரிய முறையில் அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென டொக்டர் பெல்லன தெற்கு ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.