அமெரிக்காவின் இலங்கைக்கான புதிய தூதுவராக ஜூலி ஜியோ சுன் என்பவரை நியமிக்க ஜனாதிபதி ஜோபைன் உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, தற்போது இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக அலைனா பி டெப்லிட்ஸ் அம்மையார் பணியாற்றி வருகின்றார்.
இவருக்கு பதிலாகவே ஜூலி ஜியோ சுன் என்பவரை நியமிக்க அமெரிக்க ஜனாதிபதி திடீர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த நியமனம் எப்போது நடைமுறைக்கு வரும் என்ற தகவல்கள் வெளியாகவில்லை.