யாழ்.மாவட்டத்தில் மேலுமொருவர் கொரோனாதொற்றால் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று உயிரிழந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் 63 வயதுடைய முத்துக்குமார் ராஜ்குமார் என்று தெரியவந்துள்ளது.
இதனிடையே கடந்த இரவு யாழ்.போதனா வைத்தியசாலையின் ஆய்வுகூடத்தில் 324 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் 08 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
அவர்களில் யாழ்.போதனாவில் 04 பேரும் , பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒவரும்இ கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் இருவரும், கிளிநொச்சி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ள்ளனர்.