யாழ் அரசு அலுவலக ஊழியர்களுக்கு விசேட மகிழ்ச்சி செய்தி!

யாழ்ப்பாணத்துக்கும் வவுனியாவுக்குமிடையிலான அலுவலக ஊழியர்கள் புகையிரதம் எதிர்வரும் திங்கட்கிழமை தொடக்கம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதன்படி யாழ் மாவட்டத்திலிருந்து வெளி மாவட்டங்களுக்கு வேலைக்குச் செல்லும் அரச ஊழியர்கள் இந்த புகையிரதத்தில் பயணிக்கமுடியும் என கூறப்பட்டுள்ளது. குறித்த புகையிரதம் யாழ் காங்கேசந்துறையிலிருந்து காலை 5.15க்கு புறப்பட்டு 8.00 மணியளவில் வவுனியாவை சென்றடையும்.

அதேபோல் மாலை 5.00 மணிக்கு வவுனியாவிலிருந்து புறப்பட்டு காங்கேசந்துறைக்கு இரவு 8.00 மணியளவில் வந்தடையும். இதன்போது யாழ்ப்பாணத்துக்கும் வவுனியாவுக்குமிடையிலான சகல புகையிரத நிறுத்தங்களிலும் குறித்த புகையிரதம் நிறுத்தப்படும் என மேலும் கூறப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் குறித்த புகையிரதத்தில் சாதாரண பயணிகளும் பயணிக்கமுடியும் என கூறப்பட்டுள்ளது.