இலங்கையில் திங்கள் முதல் வருகின்றது புதுச்சட்டம்!

இலங்கையில் கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் பொதுப் போக்குவரத்துக்களின்போது வருகின்ற திங்கட்கிழமை முதல் புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது.

அதன்படி வருகின்ற திங்கட்கிழமை தொடக்கம் பஸ் மற்றும் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் பயணிகள் தொழில்சார்ந்த அடையாள அட்டையை காண்பிப்பது கட்டாயப்படுத்தப்படவுள்ளது.

அதுமட்டுமல்லாது பொதுப் போக்குவரத்தின்போது பொலிஸார் திடீர் சோதனைகளையும் செய்யக் காத்திருக்கின்றனர்.

எனவே மக்கள் அநாவசியமாக வெளியே வருவதனை தவிர்க்குமாறு அறிவுருத்தப்பட்டுள்ளனர்.