பருத்தித்துறை பஸ் தரிப்பு நிலையத்தில் உணவருந்திக் கொண்டிருந்த தனியார் பேரூந்து சாரதி திடீரென சற்று முன்னர் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் அல்வாய் வடமத்தி அல்வாய் பகுதியைச் சேர்ந்த சிவஞானசுந்தரம் மதியழகன் (வயது 58) என்பவரே உயிரிழந்துள்ளார்.
பருத்தித்துறை தனியார் பேரூந்து சாலையில் பருத்தித்துறை – யாழ்ப்பாணம் (751) வீதியில் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டு வந்த சாரதியே உயிரிழந்துள்ளார்.






