இறுக்கமான சுகாதார நடைமுறைகளுடன் சந்நிதியான் கொடியேற்றம் சிறப்பாக இடம்பெற்றது.
தற்போது நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் சுகாதார அமைச்சினால் ஆலயஉற்சவங்கள் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள இறுக்கமான சுகாதார நடைமுறைகளை பின்பற்றி, மட்டுப்படுத்தப்பட்ட 100 பேரின் பங்குபற்றலுடன் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற தொண்டைமானாறு செல்வ சந்நிதியான் முருகன் ஆலய வருடாந்த கொடியேற்ற உற்சவம் இரவு 7 மணி அளவில் பூசை வழிபாடுகளோடு ஆரம்பமாகி சிறப்பாக இடம்பெற்றது.
செல்வச்சந்நிதி ஆலயத்திற்குள் நுழைவதற்கு அனைத்து இடங்களிலும் வீதித் தடைகள் போடப்பட்டு பொலீஸ் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டு ஆலயத்திற்குள் எவரும் செல்லதடை விதிக்கப்பட்டிருந்தது.
பிசி ஆர்,அன்ரியன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட சுகாதாரப் பிரிவினரால் அனுமதிக்கப்பட்ட 100 பேருடன் ஆலயத்தின் வருடாந்த கொடியேற்ற உற்சவம் சிறப்பாக இடம்பெற்றது.