பேருந்தில் இருக்கையில் அமர்ந்திருந்தவாறே உயிரிழந்த பெண் பயணி!

ஹொரணையில் இருந்து பாணந்துறைக்கு மாலை பேருந்தில் பயணித்த பெண் ஒருவர் தனது இருக்கையில் இறந்துள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.

தூங்கிக் கொண்டிருப்பதாக சந்தேகத்தில் பேருந்தில் பெண்ணை நடத்துனர் விசாரித்திருந்தார்.

எனினும் பின் இறந்ததென தெரிந்ததால் பேருந்து பாணந்துறை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

சுமார் 60 அல்லது 65 வயதிற்குட்பட்ட அந்த பெண் பற்றி தமக்கு எந்த தகவல் கிடைக்கவில்லை என்று பொலிஸார் கூறுகின்றனர்.