ஊரடங்குச் சட்டம் உடனடியாக அமுல்படுத்தப்பட்டால் சுமார் ஆயிரத்து இருநூறு மரணங்களை தவிர்க்க முடியும் என்று ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சுனேத் அகம்பொடி தெரிவித்துள்ளார்.
ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தினால் எதிர்வரும் 20 நாட்களில் ஏற்படக்கூடிய 1200 மரணங்களை தவிர்க்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் கொவிட் புள்ளிவிபரத் தரவுகளின் அடிப்படையில் இந்த விடயத்தை எதிர்வு கூற முடிகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனது டுவிட்டர் பக்கத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது,
The SLCovid prediction model https://t.co/29JiuOSI1o clearly shows that immediate curfew will prevent at least 1200 additional deaths within the next 20 days. 5 days delay in decision making will be an "Involuntary manslaughter" of at least 700 people. pic.twitter.com/73ekhYv82I
— Prof Suneth Agampodi (@sunethagampodi) August 10, 2021
ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தும் தீர்மானம் 5 நாட்கள் பின்தள்ளப்பட்டால் 700 மரணங்களுக்கு அது ஏதுவாக அமையக் கூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இரண்டு வாரங்களில் நாளாந்த மரண எண்ணிக்கை 150 ஆக உயர்வடையும் எனவும் அவர் கடந்த 7ம் திகதி எச்சரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பேராசிரியர் சுனேத், அமெரிக்க யேல் பல்கலைக்கழகத்தின் தொற்று நோய் தொடர்பான நிபுணராகவும் கடமையாற்றி வருகின்றார் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.