நாட்டில் தற்போது நிலவும் கொரோனா தொற்று பரவல் காரணமாக கம்பஹா நகரில் அனைத்து வர்த்தக நிலையங்களையும் மூட கம்பஹா வர்த்தக சங்கம் தீர்மானித்துள்ளதாக கூறப்படுகின்றது.
அதன்படி, கம்பஹா நகரில் அனைத்து வர்த்தக நிலையங்களையும் இன்று முதல் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை மூட தீர்மானித்துள்ளதாக கம்பஹா மேயர் எரங்க சேனாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.