யாழ்.வல்வெட்டித்துறை நகரசபை ஆட்சியை இழந்தது த.தே.கூட்டமைப்பு. தவிசாளராக சுயேட்சை குழு உறுப்பினர்.

வல்வெட்டித்துறை நகரசபை தவிசாளர் தெரிவு இன்று (22) காலை இடம்பெற்றது. வல்வெட்டித்துறை நகரசபை தவிசாளராக பதவிவகித்த கோ.கருணாணந்தராசா அண்மையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு புதிய தவிசாளர் தெரிவு அண்மையில் இடம்பெற்ற போதும், போதிய உறுப்பினர்கள் பிரசன்னமாகியிருக்காததால், இன்று வரை தவிசாளர் தெரிவு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் தவிசாளராக சதீஷ், சுயேட்சை சார்பில் செல்வேந்திரா போட்டியிட்டனர்.

தற்போது நகரசபையின் புதிய தவிசாளராக சுயேட்சை குழு உறுப்பினர் சபாரத்தினம் செல்வேந்திரா ஒரு மேலதிக வாக்கினால் தொிவு செய்யப்பட்டிருக்கின்றார். யாழ்.வல்வெட்டித்துறை நகரசபை ஆட்சியை இழந்தது த.தே.கூட்டமைப்பு.