நாட்டில் நிலவும் எரிவாயு தட்டுப்பாடு…சூடுபிடிக்கும் விறகு வியாபாரம்

நாட்டில் சமையல் எரிவாயு விலையானது சடுதியாக உயர்ந்துள்ளது. இதனையடுத்து அங்கு விறகு வியாபாரமானது நாளுக்கு நாள் வேகமெடுத்து வருகிறது.

வவவுனியாவில் மக்கள் விறகு கொள்வனவு செய்வதற்கு ஏதுவாக விறகு வியாபாரிகள் விறகு விற்பனையில் அதிகமாக ஈடுபட்டு வருவதனை காண முடிந்தது.

அதன்படி துவிச்சக்கரவண்டியில் எடுத்துவரப்படும் விறகானது ரூ.1800 க்கும், மோட்டார் சைக்கிளில் கொண்டுவரப்படும் விறகானது ரூ.2,500 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

மேலும் பொதுமக்கள் பலர் எரிவாயு பயன்பாட்டினை தவிர்த்துவிட்டு விறகு கொள்வனவில் ஈடுபடுவதை அவதானிக்க முடிந்தது.