உனக்காகத் துடிப்பவள் அம்மா….. யாழில் உயிரிழந்த தந்தையின் உருகவைக்கும் கடிதம்!

யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பகுதியில் சில தினங்களுக்கு முன்னர் காணாமல் போன முதியவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆனைக்கோட்டை உயரப்புலம் பகுதியிலுள்ள கிணறு ஒன்றில் இருந்தே குறித்த நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

முதியவர் கடந்த சில தினங்களாக காணாமல் போயிருந்த நிலையில் உறவினர்கள் வரை தேடி வந்ததுடன் அதுதொடர்பில் மானிப்பாய் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்திருந்தனர்.

இந்நிலையில், இன்றைய தினம் உயரப்புலம் பகுதியிலுள்ள பொதுக்கிணற்றில் இருந்து முதியவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் கிணற்றின் அருகிலிருந்த பையினுள் காணப்பட்ட அப்பியாசக் கொப்பியில் , உனக்காக துடிப்பவள் அம்மாதான் அவளை சந்தோஷப்படுத்து என அவர் தனது மகனுக்கு கடிதம் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.