கொரோனா தொற்றால் யாழ்.மானிப்பாயைச் சேர்ந்த சுந்தர்சன் இலத்திரனியல் நிறுவனத்தின் ஸ்தாபகரும், பிரபல வர்த்தகருமான சு.சிவகுமாரன் மரணமடைந்துள்ளார்.
இன்று ஞாயிற்றுக்கிழமை (21) யாழில் காலமானார்.
இவர் மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயத் தர்மகர்த்தாசபையின் பொருளாளராகப் பெரும் பணிகள் பலவும் செய்ததுடன் சுந்தர்சன் இலத்திரனியல் நிறுவனத்தின் மூலமாகப் பலருக்கும் வேலைவாய்ப்புக் கொடுத்து அவர்களின் குடும்பங்களை வாழவைத்துள்ளார்.
இதேவேளை, மானிப்பாயில் பல்வேறு சமூக சேவைகளையும் மேற்கொண்டதுடன், உதவிகள் கேட்பவர்களுக்கு இல்லையெனாது ஈந்திட்ட வள்ளலாகவும் விளங்கினர்.
இந்நிலையில் அவரின் ஆத்மா சாந்தியடைய யாழ். மானிப்பாயை மக்கள் பிரார்த்திக்கின்றோம்.