இரவில் சரியான தூக்கம் இல்லையா? அப்போ உங்களுக்கு இந்த நோய் இருக்கலாம்!

தூக்கமின்மை பிரச்சனையால் பலர் பாதிக்கப்படுவது மட்டுமன்றி அதனால் பலர் பல வகை நோய்களையும் சந்திக்கின்றனர். அதில் முக்கியமாக தூக்கமின்மை வளர்ச்சிதை மாற்றத்தை தடுக்கும் என்பது பலரும் அறிந்தது தான்.

ஆனால் அது நீரிழிவு நோயையும் உருவாக்கும் என்பது அதிர்ச்சியான தகவலாக இருக்கிறது. அதாவது தூக்கமின்மை மன அழுத்த ஹார்மோனான கார்டிசோலை அதிகமாக வெளியிடுகிறது.

இது இன்சுலின் உற்பத்தியை தடுக்கிறது. இதன் காரணமாக இரத்த சர்க்கரை நோய் உருவாகிறது. சரி வாங்க மேலும் ஏற்படும் நோய்கள் குறித்து பார்க்கலாம்..

  • லெப்டின் என்னும் ஹார்மோனின் அளவும் குறைவதால் நமக்கு அந்த சமயத்தில் கார்போஹைட்ரேட் உணவுகளை தான் அதிகமாக சாப்பிடத் தூண்டும். ஏனெனில் லெப்டின் கார்போஹைட்ரேட் வளர்ச்சிதை மாற்றத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.
  • எனவே ஒவ்வொரு இரவையும் நீங்கள் தூக்கமின்மையால் கழிக்கிறீர்கள் எனில் உங்கள் சர்க்கரை அளவை கண்கானிப்பது நல்லது. குறைந்தது இரவு 7 மணி நேர தூக்கம் வேண்டும். அதுதான் உங்களை ஃபிட்டாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள உதவுகிறது.
  • உங்கள் படுக்கை அறையை எப்போதும் இருள் சூழந்து அமைதியான, நிம்மதி தரும் ஒரு இடமாக வைத்துக்கொள்ளுங்கள். தூங்கும் முன் செல்ஃபோன், டிவி, லாப்டாப் என எதையும் பார்க்கக் கூடாது. ஏனெனில் இது உங்கள் தூக்கத்தை தடுக்கும்.
  • படுக்கைக்கு செல்லும் முன் உங்கள் மன நிலையை அமைதியாக வைத்துக்கொள்ளுங்கள். ஆழ்ந்த தூக்கத்திற்கு படுப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் நல்ல குளியல் அல்லது புத்தகம் வாசிக்கலாம். தூங்கும் முன் காஃபி, ஆல்கஹால், புகைப்பழக்கம் கூடாது.