யாழ்.நகர்ப்பகுதியில் பல பெண்களின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி திருடி வந்த ஒருவரை பொதுமக்கள் பிடித்து, முறையாக கவனித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இன்று (04) மதியம் யாழ்.கைலாசபிள்ளையார் கோயிலின் அருகில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பையொன்றுக்குள் இரண்டு கத்திகளையும் வைத்து கொண்டு நடமாடும் இளைஞன் ஒருவர், சந்தர்ப்பம் வரும் வேளையில் கத்தியைக் காட்டி மிரட்டி திருடி வந்துள்ளார். அனேகமாக இளம்பெண்கள் தனித்து சிக்கும் சமயங்களில் கைவரிசை காட்டி வந்தார்.
அதேபோல் இன்று(04) காலை யாழ். மாம்பழச் சந்தியில் உள்ள புத்தக கடையொன்றினில் நுழைந்து அங்கு நின்ற பெண்ணின் கழுத்தில் கத்தியை வைத்து திருட முற்பட்டுள்ளார்.
பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அருகில் நின்றவர்கள் கடைக்குள் ஓடினார்கள். அதனைப் பார்த்த திருடன் தப்பியோடியுள்ளார்.
பின்னர் இதேபோல் சொக்கன் உணவகத்துக்குள்ளும் நுழைந்து திருட முற்பட்ட போது மக்களால் பிடிக்கப்பட்டு பொலிசிடம் ஒப்படைத்தனர்.
இந்த திருடன் எந்த நேரமும் அழுக்கான உடையுடன் யாழ்.நகர் வீதிகளில் நடந்து செல்வதாகவும் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் உலாவுவதாகவும் தெரிவிக்கின்றனர்.