யாழில் சிறுவன் ஒருவன் விளையாடிக்கொண்டிருந்த நிலையில் கட்டடம் ஒன்றிலிருந்து கீழே விழ்ந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் யாழ்.வட்டுக்கோட்டை – தொல்புரம் மத்தி பகுதியில் புதன்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.
மேலும் குறித்த சம்பவத்தில் ஜெயச்சந்திரன் தஜிதரன் என்ற 11 வயதுடைய சிறுவனே உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
குறித்த சிறுவன், தனது வீட்டின் மேல் தளத்தில் சகோதரனுடன் விளையாடிக்கொண்டு இருந்த வேளை தவறி விழுந்து படுகாயமடைந்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து மூளாய் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மேலும் இச்சம்பவம் குறித்த வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.