ஈ.பி.டி.பியின் ஆதரவுடன் 3 மேலதிக வாக்குகளால் யாழ் மாநகரசபை வரவு செலவு திட்டம் வெற்றி!

யாழ்ப்பாணம் மாநகர சபையில் முதல்வர், சட்டத்தரணி வி.மணிவண்ணன் சமர்ப்பித்த 2022இற்கான பாதீடு வெற்றிபெற்றுள்ளது .

3 மேலதிக வாக்குகளினால் வெற்றிபெற்றது.

யாழ்ப்பாணம் மாநகரசபையில் மொத்தமாக 45 உறுப்பினர்கள் உள்ளனர் . அதில்
கூட்டமைப்பு -16,
முன்னணி (மணிவண்ணன்) -10
ஈபிடிபி -10
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 3
ஐக்கிய தேசியக் கட்சி -3
சிறிலங்கா சுதந்திரக் கட்சி -2
தமிழர் விடுதலைக் கூட்டணி -1 என்கிற அடிப்படியில் உறுப்புரிமை கொண்டுள்ளனர்.

வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதாரவாக 24 வாக்குகளும் எதிராக 21 வாக்குகளும் அளிக்கப்பட்டன.