இலங்கையரை துக்கி சென்ற ராட்சத பட்டம்…. 40 அடி உயரத்தில் பறந்த தமிழனுக்கு காத்திருந்த போரதிர்ச்சி

சுமார் 40 அடி உயரத்தில் பட்டதோடு வானில் பறந்த இலங்கை இளைஞரின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இலங்கை – யாழ்ப்பாணத்தில் நண்பர்களோடு சேர்ந்து பட்டம் விட்ட இளைஞரை, அந்த பட்டமே தூக்கிச் சென்றுள்ளது.

காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால், மற்றவர்கள் கயிற்றை விட, கூட்டத்திலிருந்த ஒருவர் மட்டும் சுதாரித்துக்கொள்ளாமல் பட்டத்தோடு வானில் பறந்தார்.

சுமார் 40 அடி உயரத்தில் பறந்த அவரை பார்த்து, கீழே இருந்த நண்பர்கள் “கையை விடுடா” என கூச்சலிட்டனர்.

நீண்ட நேரம் ராட்சத பட்டத்துடன் இளைஞர் பறந்து பின்னர் கீழே விழுந்துள்ளார். இதேசேளை, குறித்த இளைஞர் பலத்த காயங்களுடன் உயிர் பிழைத்த அதிசயம் நடைபெற்றுள்ளது.

120 அடிக்கும் மேல் உயர இழுத்துச் செல்லப்பட்ட குறித்த இளைஞர் முப்பது அடி உயரத்தில் இருந்து கீழே குதித்து உயிர் தப்பினார்.

அத்துடன் சம்பவத்தை அடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட இளைஞன் மூன்று நாட்களின் பின்னர் சிகிச்சை பெற்று தனது விருப்பத்தின் பேரில் வீடு திரும்பியுள்ளார்.

எனினும், தற்போது முள்ளந்தண்டில் வலி ஏற்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.