பேருந்தில் நின்று கொண்டு பயணிக்கும் பயணிகளுக்கு புதிய கட்டண முறைமை அறிமுகம்!

பேருந்தில் நின்று கொண்டு பயணிக்கும் பயணிகளுக்கு புதிய கட்டண முறைமை!Posted byAdmin-January 24, 2022

எதிர்காலத்தில் பேருந்து பயணிகளுக்காக புதிய கட்டண முறைமை அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

இதன்படி அடுத்த வாரத்திற்குள் பஸ்களில் நின்று கொண்டு பயணிக்கும் பயணிகளுக்கான கட்டணத்தை அறிமுகம் செய்ய எதிர்பார்ப்பதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

கொரோனா பரவல் காரணமாக, பயணிகளை ஏற்றிச் செல்வதற்கு இருக்கை அமைப்பு அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சில பேருந்துகள் சட்டத்தை மீறுவதாக இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதன்படி இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம மேலும் தெரிவித்துள்ளார்.