2-2-2022 இன்றைய நாளின் அபூர்வ தினம்! 200 ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் அதிசயம்;

இன்றைய நாளில் 02.02.2022 என்ற தினம் ஆனது மிக அபூர்வ நாட்களாக பார்க்கப்படுகிறது. ஜீரோவைத்தவிர மற்ற அனைத்து இலக்கங்களும் அபூர்வமாக பார்க்கப்படுகிறது.

இந்த உலகம் தோன்றியதில் இருந்தே சில அறிவியல் நிகழ்ச்சிகளும், சில மூடநம்பிக்கைகளும் நம்மை தொடர்ந்து திகிலடைய செய்ய வைத்துக்கொண்டே இருக்கின்றன.

அப்படித்தான் 2000-ம் ஆண்டி உலகம் அழியும் என கூறப்பட்டது. 2000ம் வருடம் கடந்துசென்றபோது அப்பாடா பிழைத்தோம் என அனைவரும் மகிழ்ந்தோம். இதையடுத்து 2012-ம் ஆண்டில் டிசம்பர் 21ம் தேதிக்கு பிறகு மயன் காலண்டர் முடிவடைவதால் அன்றோடு உலகம் அழிந்துவிடும் என கூறப்பட்டது.

மயன் காலண்டரில் கூறப்பட்டிருந்த கணிப்புகள் சில உண்மையானதால் இந்த உலகம் அழிவு மேட்டரும் உண்மையாகத்தான் இருக்கும் என பல பண்டிதர்கள் விளக்கம் அளித்தனர்.

இதனால் அனைவரும் அன்றைய தினம் உலக அழிவை பார்க்க குடும்பத்தினருடன் வீட்டில் அமர்ந்திருந்தனர். சிலர் கடைசி ஆசைகளை நிறைவேற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

ஆனால், அன்றைய தினம், மற்றைய தினங்களைப்போல கடந்து சென்றது. இப்படி ஆண்டு தோறும் பல மூட நம்பிக்கைகள் அரங்கேறிக்கொண்டே தான் இருக்கின்றன.

சில நாட்களின் எண்கள் தான் அபூர்வமாக வரும், அப்படி கடந்த 2012ம் ஆண்டின் டிசம்பர் 12ம் தேதி 12.12.12 என அனைத்து எண்களும் 12 ஆக இருந்தன. இந்த அபூர்வ நாளுக்கு பிறகு இன்றைய நாள் 02.02.2022 என அபூர்வ நாளாக வந்திருக்கிறது.

12.02.2022, 20.02.2022, 12.12.2022 என வரும். ஆனால் அவை 2 என்ற இலக்கங்கள் மாறி மாறி வரும். இப்படி எல்லாமே 2 என வராது. 200 ஆண்டுகளுக்கு பிறகு 02.02.2222 என்ற தேதி வரும். ஆனால் அன்றைய தினம் நாம் யாரும் இருக்கப்போவதில்லை என்பதுதான் நிதர்சனம்.