கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரி மிரட்டப்பட்ட சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பிராந்திய சுகாதார பணிப்பாளர் தொடர்ந்து மௌனம் சாதிப்பதையும் பாதிக்கப்பட்ட அவரது பணிப்புக்குள் உள்ள வைத்திய அதிகாரி தொடர்பில் எதுவித கரிசனையையும் காட்டாதது தொடர்பில் நாம் மிகுந்த விசனத்தையும் தெரிவிக்கிறோம் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரி மிரட்டப்பட்ட சம்பவம் தொடர்பில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அனுப்பி வைத்த செய்திக்குறிப்பில்,
கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரிக்கு 26.01.2022 அன்று உள்ளூர் அரசியல்வாதி கோபாலகிருஸ்ணன் என்பவரால் தொலைபேசி மூலம் பல தடவைகள் அழைப்பு எடுத்து அச்சுறுத்தல் மற்றும் தகாத வார்த்தைப் பிரயோகம் என்பவை மேற்கொள்ளப்பட்டதுடன் அவரது தங்குமிடத்துக்கு அச்சுறுத்தல் நோக்கத்துடன் வாகனங்களில் இனந் தெரியாத நபர்கள் சென்று வன்செயல் புரிந்தமை தொடர்பில் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் பிரியந்தினி கமலசிங்கம் அவர்கள் வைத்திய அதிகாரிகள் சங்கத்திற்கு தெரியப்படுத்திய நிலையில்,
வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் கிளிநொச்சிக் கிளையானது உடனடியாக செயற்பட்டு கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பிரதேச பிரதிப்பொலிஸ்மா அதிபர் திரு. சமுத்திரஜீவா மற்றும் வைத்தியர் பிரியந்தினி கொடுத்த முறைப்பாட்டை விசாரிக்கும் பொலிஸ் பொறுப்பதிகாரி அவர்களை தொடர்புகொண்டு குற்றவாளிகளை விரைந்து கைது செய்யவும் சுகாதார வைத்திய அதிகாரிக்கு உரிய பாதுகாப்பை வழங்குமாறும் கேட்டுக்கொண்டதுடன்
வைத்திய அதிகாரிகள் சங்க கிளிநொச்சி கிளை செயற்குழுக் கூட்டத்தை 26.01.2022 அன்று இரவு கூட்டிய நிலையில் இவ்விடயம் தொடர்பாக தீவிரமாக கலந்தாலோசித்து தீர்மானங்களை மேற்கொண்டு அதனை எமது தாய்ச்சங்கத்துக்கும் தெரியப்படுத்தி அவர்களின் வழி நடத்தலில் நாம் இச் சம்பவத்தை உன்னிப்பாக அவதானித்து வந்திருந்தோம். அத்துடன் நாம் பொலிசாருக்கும் இது தொடர்பான பிரதான குற்றவாளிகள் அதற்கு துணைபுரிந்தோர் என்பவர்களை கைது செய்யும்படி அழுத்ததை பிரயோகித்திருந்தோம்.
அந்த நிலையில் பொலிசார் பெப்ரவரி முதலாம் திகதிக்குள் இது தொடர்பான விசாரணைகளை பூர்த்தி செய்து உரிய குற்றவாளிகளை கைது செய்வோம் என உறுதி அளித்திருந்தது. அத்துடன் சுகாதார வைத்திய அதிகாரிக்கு உரிய பாதுகாப்பு வழங்குமாறும் நாம் கேட்டிருந்தோம். இதில் எதுவித கால தாமதம் ஏற்படும் என்றாலும் நாம் எமது தாய்ச்சங்கத்தின் ஆலோசனையுடன் தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்திருந்தோம்.
சுகாதார வைத்திய அதிகாரியை நாம் கலந்துரையாடலுக்கு அழைத்திருந்த நிலையில் அவர் பயணம் செய்ய பாதுகாப்பு இல்லை என தெரிவித்திருந்த நிலையில் நாம் நேரடியாக அவர் பணிமனைக்கு சென்று நிலை தொடர்பில் ஆராய்ந்திருந்தோம். அவருக்கு அங்கு பாதுகாப்பு இல்லாத பட்சத்தில் சுகாதார வைத்திய அதிகாரியின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் கிளிநொச்சிப் பிரதேச வைத்தியசாலைக்கு அவரை தற்காலிக இடமாற்றும் ஆலோசனையையும் நாம் முன் வைத்திருந்தோம்.
இந்த நிலையில் 29. 01. 2022 அன்று எமக்கு பொலிசார் பிரதான குற்றவாளியை கைது செய்துள்ளதாக அறிவித்துள்ளனர். இந்த விசாரணை தொடர்பில் நாம் உரிய அக்கறையும் தீவிரத்தன்மையும் கொண்டு கூர்மையாக அவதானிப்போம்.
வைத்தியர்களுடைய நலன்களை பாதுகாக்கும் பிரதானமான பொறுப்புக்கூறலை கொண்டுள்ள எமது சங்கமானது இவ்வாறு வைத்தியர்களை துன்புறுத்தும் அவர்களை அச்சமூட்டும் அவர்களது தொழிற்பாடுகளை செய்யவிடாது தடுக்கும் சக்திகள் தொடர்பில் மிகுந்த அதிருப்தி கொள்வதுடன் வைத்தியர்களின் கௌரவத்தை பாதுகாக்க எமது முழுப்பலத்தையும் பிரயோகிப்போம் என்பதை தெளிவுபடுத்துகிறோம்.
அத்துடன் கிளிநொச்சி பிராந்திய சுகாதார பணிப்பாளர் அவர்கள் இது தொடர்பில் தொடர்ந்து மௌனம் சாதிப்பதையும் பாதிக்கப்பட்ட அவரது பணிப்புக்குள் உள்ள வைத்திய அதிகாரி தொடர்பில் எதுவித கரிசனையையும் காட்டாதது தொடர்பில் நாம் மிகுந்த விசனத்தையும் தெரிவிக்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அநாமதேய நபரின் மிரட்டல் தொலைபேசி உரையாடல்கள்:-
கோபால் என்பவரது மிரட்டல். இவர் தற்போது போலீசாரால் கைதாகியுள்ளார்.
இது இன்னொரு அநாமதேய தொலைபேசி அழைப்பு
டொக்டர்.பிரியந்தினி உடனான , பாராளுமன்ற உறுப்பினர் ஶ்ரீதரன் அவர்களது தொலைபேசி உரையாடல் :-