யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி பகுதியில் பெண் ஒருவரது ஒரு பவுண் தங்கச் சங்கிலி அறுக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் நேற்று வியாழக்கிழமை (18-02-2022) யாழ்.வட்டுக்கோட்டை அராலி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தின் போது, பெண்மணி சிகிச்சைக்காக வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைக்கு சென்றுவிட்டு வீடு செல்வதற்கு பேருந்துக்காக காத்திருந்தார்.
அந்நேரம் அவ்வழியே மோட்டார் சைக்கிளில் வந்த பெண்ணால் அவரது தங்கச்சங்கிலியை அறுத்து செல்லப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சந்தேகநபரை இனங்கண்ட நிலையில் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.