குறித்த நேரத்துக்கு அதிகமாக மின்வெட்டு ஏற்பட்டால் அறிவிக்க தொலைபேசி எண்: பொதுமக்களுக்கான விசேட அறிவிப்பு

நாட்டில் ஏற்படுகின்ற மின்வெட்டில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு மேல் மின்வெட்டு ஏற்பட்டால் உடனடியாக தெரிவிக்க வேண்டும் என பொதுப் பயன்பாட்டு ஆணையம் (PUCSL) மக்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

மின்சாரம் துண்டிக்கப்பட்ட பிரதேசம் மற்றும் நேரம் ஆகியவற்றைக் குறிப்பிட்டு முறைப்பாடு செய்ய வேண்டுமென அதன் தலைவர் ஜானக ரத்நாயக்க கூறியுள்ளார்.

பின்வரும் தொலைபேசி இலக்கங்களில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு உங்கள் முறைப்பாடுகளைச் சமர்ப்பிக்கலாம். (+94 11) 2 392 607/8