யாழில் தங்கத்தின் விலை கிடு கிடுவென உயர்வு! அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்

யாழ்ப்பாணத்தில் தங்கத்தின் விலை இன்று புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. 24 கரட் தூய தங்கத்தின் விலை இன்று 500 ரூபாயினால் அதிகரித்து பவுண் ஒன்று ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்வடைந்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள எதிரொலியால் தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகிறது.

அமெரிக்கா தலைமையிலான நேட்டோ நாடுகள் கூட்டமைப்பில் இணைய ரஷ்யாவின் அண்டை நாடான உக்ரைன் ஆர்வமாக இருக்கும் சூழலில் அதனை ரஷ்யா எதிர்க்கிறது. இதனால், உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்க தொடங்கியுள்ளது. இதனால், கச்சா எண்ணெய், தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வருகின்றன.

இதன் எதிரொலியாக இலங்கையிலும் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது.

யாழ்ப்பாணத்தில் இன்று 24 கரட் தூய தங்கத்தின் விலை இன்று 500 ரூபாயினால் அதிகரித்து பவுண் ஒன்று ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்வடைந்துள்ளது.