நாட்டில் அடுத்தடுத்து ஒரே நாளில் ஏற்படும் விலை அதிகரிப்பு ; மக்கள் பெரும் திண்டாட்டம்! ஒரே பார்வையில்.

நாட்டில் டொலர் நெருக்கடியினால் உணவு பொருட்கள் உட்பட அதியாவசியபொருட்களின் விலைகள் அதிரடியாக உயர்தப்பட்டுள்ளமை மக்களுக்கு பேரியாக அமைந்துள்ளது.

அந்தவகையில், எரிபொருள், மின்சாரம், பாண், பல்மா, மற்றும் இன்னோரன் பிறபொருட்களின் விலைகள் அதிகரிப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் எரிபொருள் கட்டணத்தை அதிகரித்தால் பேருந்து கட்டணங்களை அதிகரிக்கவேண்டிய நிலையேற்படும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் எரிபொருள் விலையை அதிகரித்தால் நாங்கள் பேருந்து கட்டணங்களை அதிகரிப்போம் என தனியார் பேருந்து உரிமையாளர் சங்கமும் மாகாணங்களிற்கு இடையிலான தனியார் பேருந்து உரிமையாளர் சங்கமும் தெரிவித்துள்ளன.

அத்தியாவசிய பொருட்கள் விலை அதிகரிப்பிற்கு அரசாங்கம் உடனடி தீர்வை காணவேண்டும் எனவும் அந்த சங்கங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன. அதேவேளை டீசல் விலை அதிகரித்துள்ளதால் ஐஓசியின் எரிபொருள் நிரப்பு நிலையங்களை தங்களால் பயன்படுத்த முடியாத நிலை காணப்படுவதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் டீசல் விலையை அதிகரித்தால் பஸ் கட்டணங்களை 50 வீதம் அதிகரிக்கவேண்டிய நிலையேற்படும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை முதல் கிலோமீட்டருக்கு 80 ரூபாயும் இரண்டாவது கிலோமீட்டருக்கு 50 ரூபாயும் முச்சக்கரவண்டிக் கட்டணமாக அறவிடப்படுவது நியாயமானது என அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் யோசனை முன்வைத்துள்ளது.

மேலும் நாட்டில் கையடக்க தொலைபேசிகள் மற்றும் அதற்கான உபகரணங்கள் உள்ளிட்டவற்றின் விலைகள், 30 சதவீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளது.

இத்தகவலை இலங்கை கையடக்க தொலை​பேசி விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும் எரிபொருள் விலை அதிகரிப்பு உள்ளிட்ட பல காரணிகளை கருத்தில் கொண்டு பார்க்கும் போது, இது நியாயமான விலை அதிகரிப்பு என அதன் தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.