முல்லை புதுக்குடியிருப்பில் சோகம் – இரட்டை குழந்தைகளில் ஒன்றுக்கு நேர்ந்த துயரம்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் தண்ணீர் கானுக்குள் தவறி வீழ்ந்த இரட்டை குழந்தைகளில் ஒன்று உயிரிழந்தமை அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேற்றையதினம்(19.03.2022 ) மலசல கூடத்திற்காக வைக்கப்பட்ட தண்ணீர் கானில் தவறி வீழ்ந்தே குழந்தை உயிரிழந்துள்ளது.

புதுக்குடியிருப்பு கைவேலிப்பகுதியினை சேர்ந்த சியோன்ஷன் என்ற ஒருவருடமும் மூன்று மாதமுமான குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

இரட்டைக்குழந்தைகளாக பிறந்து வீட்டில் வளர்ந்து வந்த நிலையில் ஆண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை மலசல கூடத்தினுள் வைக்கப்பட்டிருந்த வெட்டிய தண்ணீர்கானில் விழுந்து உயிரிழந்துள்ளது.

குழந்தையின் உயிரிழப்பு தொடர்பில் புதுக்குடியிருப்பு காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிபதி ரி.சரவணராஜா சம்பவ இடத்திற்கு வருகைதந்து பார்வையிட்டு விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் குழந்தையின் உடலம் மரணவிசாரணைகளின் பின்னர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.