அச்சுவேலி மத்திய கல்லூரியின் அலுவலகம் உடைக்கப்பட்டு கணினி திருடப்பட்டுள்ளது என்று பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தத் திருட்டுச் சம்பவம் நேற்று மாலை 3 மணியளவில் மின்வெட்டு காலப்பகுதியில் இடம்பெற்றுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலையில் சிசிரிவி கமராக்கள் பொருத்தப்பட்டுள்ள நிலையில் மின்வெட்டு வேளையில் அவை இயங்காத போது அலுவலகத்தின் கதவு உடைக்கப்பட்டு ஒரு லட்சம் பெறுமதியான கணினி திருடப்பட்டுள்ளது.
பாடசாலைக்கு முன்பாக பொலிஸ் காவல் உள்ள நிலையில் இந்தத் திருட்டு இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.