இலங்கை வரலாற்றில் முதன்முறையாக தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றம்! மின்னல் வேகத்தில் உயர்வடைந்துள்ளது

நாட்டில் தங்கத்தின் விலை இன்று காலை 6 ஆயிரம் ரூபாய் அதிகரித்த நிலையில் மாலை மீளவும் 3 ஆயிரம் ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் என வரலாற்றில் முதல் தடவையாக புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

ரஷ்யா – உக்ரை மீது போர் ஆரம்பமானதிலிருந்து சர்வதேச பங்குச் சந்தை மீதான முதலீடு குறைவடைந்து தங்கம் மீதான முதலீடு அதிகரித்தது. இதனால் உலக சந்தையில் தங்கத்தின் விலை பெருமளவு உயர்வடைந்தது. எனினும் அதில் தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இலங்கை ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டொலரின் பெறுமதி தொடர்ச்சியாக அதிகரித்து வருவதனால் தங்கம் மீதான விலையில் தாக்கம் செலுத்தியுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இன்று (மார்ச் 25) வெள்ளிக்கிழமை 22 கரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 850 ரூபாயாக அதிகரித்துள்ளது. கடந்த ஒரு வாரமாக ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 500 ரூபாயாக காணப்பட்டது.

தூய தங்கத்தின் விலை!

24 கரட் தூய தங்கம் இன்று பவுண் ஒன்று ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரூபாயாக அதிகரித்துள்ளது. ஒரு வாரமாக 24 கரட் தூய தங்கத்தின் விலை ஒரு பவுண் ஒரு லட்சத்து 61 ஆயிரம் ரூபாயாகக் காணப்பட்டது.