பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டை நேரில் பார்த்து கதறிய நபர்! பதறவைக்கும் சம்பவம்

ரம்புக்கனையில் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்த நிலையில், சம்பவத்தை நேரில் பார்த்தவர் கதறும் காட்சிகள் இப்போது பகிரப்பட்டு வருகிறது.

இந்த சம்பவமானது இன்று செவ்வாய்க்கிழமை (19-04-2022) மாலை இடம்பெற்றுள்ளது.

அந்த காணொளி காட்சியில் அவர், சுட வேண்டாம் நிறுத்துங்கள் நிறுத்துங்கள், அவரிற்கு பொலிஸார் சுட்டு விட்டனர். சுட வேண்டாம், சுட வேண்டாம், நிறுத்துங்கள் சார் எதுவும் செய்யாதீர்கள். தயவு செய்து நிறுத்துங்கள்.

உடனே அழைத்து செல்லுங்கள். பொலிஸ் சேர் அவரை பாருங்கள். அண்ணா இதை நிறுத்துங்கள், அங்கு ஒருவர் காயப்பட்டுவிட்டார், இதை நிறுத்துங்கள். என கதறியுள்ளார்.