கொழும்பில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனைக்கு சென்ற அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வெளியேற்றப்பட்டுள்ளார்.
இன்று காலை சிகிச்சை பெற அங்கு சென்றவரை மருத்துவர் சிகிச்சையளிக்க முடியாதென கூறி வெளியே அனுப்பியுள்ளார்.
தனியார் மருத்துவமனையின் பணியாற்றும் விசேட மருத்துவர் ரணில் ஜயவர்தன என்பவரே சிகிச்சையளிக்க முடியாதென அமைச்சரிடம் கூறியுள்ளார்.
குறித்த மருத்துவருக்கு சமூக வலைத்தளங்களில் மக்கள் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.
நாடாவிய ரீதியில் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் முன்னெடுக்கும் ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் வைத்தியரின் செயற்பாடு அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.