இலங்கையில் உள்ள பிரதேசம் ஒன்றில் 100 ரூபாவை கொடுக்க மறுத்த 27 வயதுடைய யுவதியொருவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் இரத்தினபுரி – எலபாத – மஹிரகல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
மேலும் இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவது,
வேலை முடிந்து வீடு திரும்பும் போது வீதியில் தங்கியிருந்த இளைஞன் ஒருவன் குறித்த யுவதியிடம் 100 ரூபாவை கோரியதாகவும், அதனை கொடுக்க மறுத்துள்ள நிலையில் யுவதி கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த யுவதி கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டதாக தகவல் சேகரிக்க சென்ற செய்தியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.