கண்டி-கலஹா தெல்தோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயதான பிரியதர்ஷினி மாயம் – பதறும் பெற்றோர்

கண்டி-கலஹா தெல்தோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயதான ஆறுமுகம் பிரியதர்ஷினி என்ற சிறுமி கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கலஹா பொலிஸ் நிலையத்தில் குறித்த சிறுமியின் பெற்றோரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் கலஹா பொலிஸார் குறித்த சம்பவம் தொடர்பில் அடுத்தகட்ட விசாரணைகளை ஆரம்பத்தள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் குறித்த சிறுமியின் குடும்பத்தினரிடம் தொடர்பு கொண்டு கேட்ட பொழுத்து. அவர் குறித்து எந்த தகவல்களும் இதுவரை கிடைக்கவில்லையென்றும், தொடர்ந்து தேடுதலில் ஈடுபட்டு வருவதாகவும் அவரை கண்டுபிடிக்கை பொதுமக்கள் உதவி செய்ய வேண்டுமெனவும் குறித்த சிறுமியின் சகோதரி தெரிவித்தார்.

இந்நிலையில், குறித்த சிறுமி தொடர்பான தகவல் அறிந்தால் 0775251791, 0787910688 இந்த இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.