இன்று(11) முதல் முன்பதிவு செய்த விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே ஒரு நாள் மற்றும் வழக்கமான சேவைகளின் கீழ் கடவுச்சீட்டு விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.
நாளுக்கு நாள் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது, அத்துடன் மக்கள் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள நீண்ட வரிசைகளில் காத்து நிற்கின்றனர்.
ஆகையால் முன்பதிவு செய்தவர்களுக்கு மாத்திரம் கடவுச்சீட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.