முதல் ஆறு மாதங்களில் அரசாங்க வருவாய் அதிகரிப்பு

கடந்த ஆண்டின் (2021) முதல் ஆறு மாதங்களுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் (2022) முதல் ஆறு மாதங்களில் அரசாங்க வருவாய் 28.54 சதவீதம் அதிகரித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் சமீபத்திய அறிக்கையின்படி, 2021 முதல் ஆறு மாதங்களில் 715.3 பில்லியன் அரசாங்க வருவாய் இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் (2022) 919.5 பில்லியனாக அதிகரித்துள்ளது.

இந்த காலகட்டத்தில் அரசின் வரி வருவாய் 641.2 பில்லியன் ரூபாயில் இருந்து 798.8 பில்லியன் ரூபாவாகவும், வரி அல்லாத வருவாய் 73.3 பில்லியன் ரூபாவில் இருந்து 119.7 பில்லியன் ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.

எவ்வாறாயினும், அரசாங்க வருமானம் அதிகரித்தாலும், இந்தக் காலகட்டத்தில் அரசின் செலவு 1,495.5 பில்லியன் ரூபாவில் இருந்து 1,822.1 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது.