திடீர் தொண்டை வலியில் அவதிப்படுகிறீர்களா? உடனே சரியாக இதோ அசத்தலான டிப்ஸ்

பொதுவாக காலநிலை மாற்றங்கள் ஏற்படும் போது பலருக்கு சளி பிடிப்பதுடன் தொண்டை வலியும் தொண்டை கட்டிக்கொண்டு கரகரப்பும் வரக்கூடும்.

இதனால் எச்சிலை கூட விழுங்க முடியாமல் தவித்துப்போய் விடுவோம்.

இதனை மருந்துகளை விட ஒரு சில இயற்கை வழிகள் மூலம் கூட போக்கலாம்.

தற்போது தொண்டைவலியை எளியமுறையில் போக்க கூடிய சில வீட்டு வைத்தியங்களை இங்கே பார்ப்போம்.

சூடான பாலின் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் கருபட்டி சேர்த்து இரவில் சேர்த்த குடிக்கவும். இது மூக்கடைப்பை சரி செய்யும்.

உங்களுக்கு கடும் இருமல் இருந்தால் காலையில் ஒரு டம்ளர் சுடுதண்ணீரில் உப்பு, மஞ்சள் சேர்த்து கொப்பளித்து துப்புங்கள். இது நல்ல தீர்வை தரும்.

தொடர்ந்து சூடு தண்ணீர் குடித்து வந்தால் தொண்டைவலி நீங்கும்

துளசி, வேப்பிலை, ஆடாதொடை சேர்த்து ஆவி பிடிக்கவும். இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

சிற்றரத்தையை இடித்துப் பொடியாக்கி, அதனுடன் 5 கிராம் தேன் கலந்து சாப்பிட்டுவந்தால் தொண்டைப்புண் குறையும்.

கடுகைப் பொடி செய்து தொண்டையின் வெளிப்புறத்தில் பற்றுப் போட்டால் தொண்டை வலி குணமாகும்.

இஞ்சியுடன் தேன், லவங்கப் பட்டை, துளசி மூன்றையும் சேர்த்து கொதிக்க வைத்துக் குடித்தால் தொண்டை கரகரப்பு நீங்கும்.