அரச சேவையில் ஏற்பட்டுள்ள ஆளனி பற்றாக்குறை – 2000 ஊழியர்களுக்கு அவசர தேவை

இலங்கை தபால் திணைக்களத்தில் இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட வெற்றிடங்கள் இருப்பதாக பிரதித் தபால்மா அதிபர் ராஜித ரணசிங்ஹ தெரிவித்துள்ளார்.

இருப்பினும் அரச சேவையில் ஆட்களை இணைத்துக் கொள்வது நிறுத்தப்பட்டுள்ளதால் அத்தியாவசிய சேவைக்காக அரச சேவையில் உள்ளவர்களை இணைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்று 218 பேருக்கு பதவிஉயர்வு வழங்கி அவர்களுக்கான பயிற்சி நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

உள்ளக ரீதியில் நடத்தப்பட்ட பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைவாக இவர்கள் தெரிவு செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.