இலங்கையில் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களை அமைக்க இந்தியாவின் அதானி க்ரீன் எனர்ஜி லிமிடெட் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை முதலீட்டுச் சபை, அதானி க்ரீன் எனர்ஜி லிமிடெட் நிறுவனத்திற்கான அனுமதி கடிதத்தை வழங்கியுள்ளது.
காற்றாலை மின் உற்பத்தி நிலையங்கள்
இதற்கமைய மன்னார் மற்றும் பூநகரியில் 442 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் இந்த காற்றாலை மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.
இந்த திட்டத்தின் மூலம் இரண்டு ஆண்டுகளில் 350 மெகாவாட் மின்சாரம் தேசிய மின் தொகுப்பில் சேர்க்கப்படும் என இலங்கை முதலீட்டுச் சபை தெரிவித்துள்ளது.